கடந்த மாதம் போர் தொடங்கியதில் இருந்து உக்ரைன் இணையதளங்கள் மீது ரஷ்ய ஹேக்கர்கள் இடைவிடாத தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் நாட்டை சேர்ந்த சைபர் கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உக்ரைனின் சிறப்பு தொடர்பு மற்றும் தகவல் பாதுகாப்புக்கான சேவை அமைப்பு , "ரஷ்ய ஹேக்கர்கள் உக்ரைனின் இணையதளம் மற்றும் தகவல் வளங்களை இடைவிடாது தாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். ஜனாதிபதி, பாராளுமன்றம், அமைச்சரவை, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் உள்விவகார அமைச்சகத்துக்கு சொந்தமான தளங்கள் இந்த இணைய தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.
மிக சக்திவாய்ந்த இந்த தாக்குதல்கள் உச்சபட்ச அளவான 100 ஜிபிபிஎஸ்ஸை தாண்டியது. எதிரிகளின் அனைத்து தாக்குதல்களையும் கடந்து அரசு அமைப்புகளின் தளங்கள் இப்போதும் செயல்பாட்டில் உள்ளன. எனவே போர்க்களத்திலும், சைபர் வெளியிலும் ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்வோம் " என்று தெரிவித்துள்ளது.
அதே வேளையில், நாட்டின் முக்கிய உள்கட்டமைப்பைப் பாதுகாக்கவும், ரஷ்ய படைகளுக்கு எதிரான இணைய உளவுப் பணிகளை மேற்கொள்ளவும் உக்ரைன் தனது ஹேக்கரை நிலத்திற்கு அடியில் அமைக்க அழைப்பு விடுத்துள்ளது.
ஆனால், இது தொடர்பாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் எந்த கருத்தும் கூறவில்லை. அதே சமயத்தில் கடந்த வெள்ளி கிழமையன்று ரஷ்யாவின் தேசிய இணைய சேவை ஒருங்கிணைப்பு மையம், ரஷ்ய தகவல் வளங்கள் மற்றும் இணையதள சேவை மீது ஹேக்கர்களால் "மிகப்பெரிய கணினி தாக்குதல்கள்" நடந்தப்பட்டதாக தெரிவித்தது.