ரஷ்யா - உக்ரைன்

எதற்கும் துணிந்த உக்ரைன்- 'பீர்' வெடிகுண்டுகளை தயார் செய்யும் மதுபான ஆலை

எதற்கும் துணிந்த உக்ரைன்- 'பீர்' வெடிகுண்டுகளை தயார் செய்யும் மதுபான ஆலை

JustinDurai

உக்ரைனில் உள்ள மதுபான ஆலையில் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுக்க பெட்ரோல் வெடி குண்டுகளை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

இன்று 5-வது நாளாக உக்ரைன் மீதான ரஷியாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்து வருகிறது. நேற்று நள்ளிரவில் தலை நகர் கீவ்வில் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகின. கீவ் நகரை பிடிக்க ரஷிய படையினர் தீவிரமாக உள்ளனர். அவர்களை எதிர்த்து போரிடுவதற்காக உக்ரைன் மக்கள் ஆயுதங்களுடன் தெருங்களில் இறங்கியுள்ளனர்.

இச்சூழலில், ரஷ்ய படைகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துமாறு பொதுமக்களுக்கு உக்ரைன் அரசு அறிவுறுத்தியது. அதன்படி, உக்ரைனில் உள்ள மதுபான ஆலையில் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுக்க பெட்ரோல் மற்றும் பீர் வெடி குண்டுகளை தயாரிக்கும் பணி மும்முரம் நடந்து வருகிறது. "இந்தப் போரில் வெல்ல எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்" என்று உறுதிபட கூறுகிறார் மதுபான ஆலை உரிமையாளர் யூரி ஜஸ்டாவ்னி.

மேலும்  லிவிவ் நகரில் உள்ள பியர் தயாரிப்பு ஆலையில் ரஷ்ய படைகளை தாக்க விசேஷ பெட்ரோல் வெடிகுண்டுகளை தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக  ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க: போர்க்களத்தில் குடும்பத்தலைவன்: மீண்டும் சந்திப்போமா? சிதறும் உக்ரைன் குடும்பங்கள்