ரஷ்யா - உக்ரைன்

உக்ரைனில் தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா: முழு முடக்கம் அமல்

உக்ரைனில் தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா: முழு முடக்கம் அமல்

Sinekadhara

உக்ரைனில் மேற்கு பகுதிகளில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், கீவ் நகரில் வரும் 17 ஆம் தேதி காலை 7 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

உக்ரைனின் கீவ் நகரத்தின் மீது வான்வழியாக தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்ய படைகள் குடியிருப்புகள் மீதும் சரமாரியாக குண்டுகளை வீசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன. இதில் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்திருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. குண்டுவீச்சில் பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சூழலில் தாக்குதலில் இருந்து பொதுமக்களை காப்பாற்றும் நோக்கில் கீவ் நகரில் வரும் 17 ஆம் தேதி காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மேயர் விடாலி கிளிட்ஸ்கோ அறிவித்துள்ளார். பொதுமக்கள் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பாதுகாப்பான இடத்திற்கு புலம் பெயர்பவர்கள் மட்டுமே வீடுகளை விட்டு வெளியே வரலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.