தாக்குதலின் வேகத்தை ரஷ்ய ராணுவம் குறைத்துள்ளதாக உக்ரைன் நாட்டு ராணுவம் தகவல் தெரிவித்திருக்கிறது.
உக்ரைனில் கடந்த நாட்களாக ரஷ்ய ராணுவம் ஏவுகணை மற்றும் குண்டுகள்வீசி தாக்குதல் நடத்திவந்தது. இந்நிலையில் தாக்கத்தின் தீவிரத்தை ரஷ்ய ராணுவம் சற்று குறைத்திருக்கிறது. உக்ரைனின் கார்கிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஒலித்துவந்த போர் விமான தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலி நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக கடைகள் திறக்கப்பட்டுள்ளன. உக்ரைனில் அந்நாட்டு நேரப்படி காலை 8 மணிமுதல் பல்பொருள் அங்காடிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
பெலாரஸில் உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடங்கும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்குப் பிறகே போர் நிலை நீடிக்குமா அல்லது இருநாடுகளுக்கும் இடையே சமாதானம் நிலவுமா என்பது குறித்த விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.