ரஷ்யா - உக்ரைன்

யுத்த களத்தில் துப்பாக்கியை ஏந்தினாரா 'மிஸ் உக்ரைன்'? #FactCheck

யுத்த களத்தில் துப்பாக்கியை ஏந்தினாரா 'மிஸ் உக்ரைன்'? #FactCheck

Veeramani

முன்னாள் மிஸ் உக்ரைன் அழகி பட்டம் வென்ற அனஸ்டாசியா லென்னா ரஷ்யாவுக்கு எதிரான போருக்காக ராணுவத்தில் இணைந்தாக செய்தி வெளியானது. ஆனால் இப்போது அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நாட்டுக்காக தங்கள் நாட்டு அதிபர் செலன்ஸ்கி போர்க்களத்தில் களமிறங்கியதை முன் உதாரணமாகக் கொண்டு அந்நாட்டைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் துணிச்சலுடன் யுத்த களத்திற்கு வந்துள்ளனர். அந்த வகையில் தானும் நாட்டைக் காக்க களத்தில் இறங்கியுள்ளதாக லென்னா முன்னதாக கூறியிருந்தார்.

ஆனால் இப்போது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அவர், ‘’ராணுவத்தில் சேரும் எண்ணம் இல்லை. நான் கையில் வைத்திருப்பது ஏர்சாஃப்ட் கன் வகையைச் சேர்ந்ததாகும். உண்மையான துப்பாக்கி அல்ல. ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட உக்ரைன் மக்களை அழைக்கும் வகையில், இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளேன்,’’ என குறிப்பிட்டுள்ளார். லென்னா கடந்த 2015 ஆம் ஆண்டு மிஸ் உக்ரைன் அழகிப்பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.