ரஷ்யா - உக்ரைன்

”நேட்டோ ஆயுதங்கள் வழங்கினால் மோசமான பின்விளைவுகள் ஏற்படும்” - புடின் எச்சரிக்கை!

”நேட்டோ ஆயுதங்கள் வழங்கினால் மோசமான பின்விளைவுகள் ஏற்படும்” - புடின் எச்சரிக்கை!

ஜா. ஜாக்சன் சிங்

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கும் நேட்டோ கூட்டமைப்பின் முடிவு மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நேட்டோ கூட்டமைப்பு இன்று மாலை அவசர ஆலோசனையை நடத்தியது. அதில், ரஷ்ய தாக்குதலை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கவும், மனிதாபிமான அடிப்படையில் நிதியுதவி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

நேட்டோ கூட்டமைப்பின் இந்த முடிவானது, ரஷ்யா பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, கையிருப்பில் இருக்கும் ஆயுதங்களை கொண்டே உக்ரைன் தீவிரமாக போரிட்டு வரும் சூழலில், மேலும் அதற்கு ஆயுதங்கள் கிடைக்கப் பெற்றால் ரஷ்ய ராணுவம் கடுமையான பாதிப்பை சந்திக்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், நேட்டோ கூட்டமைப்பின் இந்த முடிவுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கவுள்ளதாக நேட்டோ கூட்டமைப்பு அறிவித்திருப்பது மிகவும் தவறான செயல். அவ்வாறு உக்ரைனுக்கு நேட்டோ ஆயுதங்களை வழங்கினால், அது மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.