ரஷ்யா - உக்ரைன்

ரஷ்யாவுக்கு வான் எல்லையை மூடிய நாடுகள் - எவை எவை தெரியுமா?

ரஷ்யாவுக்கு வான் எல்லையை மூடிய நாடுகள் - எவை எவை தெரியுமா?

ஜா. ஜாக்சன் சிங்

உக்ரைன் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ரஷ்ய விமானங்கள் தங்கள் வான் பரப்பில் பறப்பதற்கு 13 நாடுகள் தடை விதித்திருக்கின்றன.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருந்தபோதிலும், தனது போர் நடவடிக்கையை கைவிட ரஷ்யா மறுத்து வருகிறது. இதனால் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடையை விதித்துள்ளன.

இது, ரஷ்யாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டு வரும் சூழலில், அந்நாட்டின் விமானங்கள் தங்கள் வான் பரப்பில் பறப்பதற்கு 13 நாடுகள் தடை விதித்துள்ளன.

அதன்படி, பிரிட்டன், பெல்ஜியம், லாட்வியா, அயர்லாந்து, ஃபின்லாந்து, எஸ்டோனியா, லிதுவானியா, போலந்து, பல்கேரியா, செக் குடியரசு, மால்டோவா, ரோமானியா, ஸ்லோவேனியா ஆகிய 13 நாடுகள் இந்த தடையை விதித்திருக்கின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மேற்குறிப்பிட்ட 13 நாடுகளின் விமானங்களும் தனது வான் பரப்பில் பறப்பதற்கு ரஷ்யா தடை விதித்துள்ளது.