மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பு காரணமாக வரும் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தங்கள் தயாரிப்புகளின் விலையை உயர்த்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்திச் செலவு அதிகரிப்பின் முழு சுமையையும் நுகர்வோர் மீது சுமத்தவில்லை என்றும் மாருதி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. எனினும் எந்தெந்த மாடல் கார்கள், எவ்வளவு விலை உயர்கிறது என்பதை மாருதி நிறுவனம் தெரிவிக்கவில்லை.
இந்திய கார் சந்தையில் 45 சதவீத பங்குடன் மாருதி சுசுகி முதலிடத்தில் உள்ளது. மூன்றரை லட்சம் ரூபாய் தொடங்கி 28 லட்சம் ரூபாய் வரை பல்வேறு மாடல்களில் கார்களை இந்நிறுவனம் விற்று வருகிறது. மாருதி தவிர வேறு சில நிறுவனங்களின் கார் விலையும் ஜனவரி முதல் உயர்கிறது. டாடா, மகிந்திரா அண்டு மகிந்திரா, ஆடி கார் நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகள் விலையை உயர்த்த உள்ளன.