இந்தியாவின் பிரீமியம் சொகுசு வகை காரான பி.எம்.டபிள்யூ, X1 சீரிஸ் வரிசையில் புதிதாக iX1 SUV காரை வெளியிட்டுள்ளது. இந்த காரின் டெலிவரி வரும் அக்டோபர் மாதம் தொடங்குகிறது. இந்த சொகுசு SUV காரில் முன் LED ஹெட் லைட், சதுர வடிவ வீல் ஆர்ச் மற்றும் L வகை LED டைல் லைட் உள்ளது.
இந்த கார் ALPINE WHITE NON METAALIC PAINT உடன் SPACE SILVER, BLACK SAPPHIRE உடன் STROM BAY METAALIC நிறங்களில் கிடைக்கிறது. இதன் உட்புறம் முழு டிஜிட்டல் BMW கர்வ் டிஸ்பிளே வசதி இருக்கிறது. காரின் உள்ளே M SPORT லெதர் ஸ்டேரிங் வீல், ப்ளு ரிங் பினிஷ் லோகோ, ஆம்பிஎண்ட் லைட்டிங் மற்றும் 12 ஸ்பீக்கர் உள்ள ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவை
இருக்கின்றன. மேலும் பேட்டரி வசதியாக 66.4 kilo watt per hour பேக் வசதி உடன் டூயல் எலக்ட்ரிக் மோட்டார் வசதி இருக்கிறது.
இதன் மூலம் அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோ
மீட்டர் தூரம் பயணிக்க முடியும். இதில் XDRIVE AWD டெக்னாலஜி இருப்பதால் ஒரு முறை சார்ஜ் செய்தால் 440 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொள்ளலாம். இது ஐந்தாவது ஜெனரேஷன் edrive technology ஆகும். இதன் மூலம் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை 5 புள்ளி 6 நொடிகளில் கடக்க முடியும். இதன் தொடக்க விலை 66 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த காருக்கு இரண்டு ஆண்டுகள் அன்லிமிடெட் கிலோமீட்டர் வாரன்ட்டி கொடுக்கப்பட்டுள்ளது.இதன்பேட்டரி பேக் 8 ஆண்டுகள் அல்லது 1லட்சத்து அறுபது ஆயிரம் கிலோ மீட்டர் வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது