மாருதி சுசுகி கூகுள்
கார்

’Alto K10’ மாடலை திரும்ப பெறும் மாருதி சுசுகி நிறுவனம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி! காரணம் இதுதான்!

சுசுகி தனது ஆல்டோ கே 10 மாடலை 2022 ஆகஸ்ட் 18ம் தேதி அன்று அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Jayashree A

இக்கால இளைஞர்கள் மனதில் வாழ்க்கையில் எப்படியாவது தங்களுக்கென்று ஒரு கார் வாங்கிவிடவேண்டும் என்று ஆசைப்படுவதுண்டு. அதனால் வங்கியில் கடன் வாங்கி EMI போட்டு ஒரு காரையும் வாங்கிவிடுவார்கள். ஆனால் அந்தக் கார் சில மாதங்களில் அல்லது சில வருடங்களில் பழுது ஆனால், அவர்களின் கார் கனவு கடினமான கனவுபோல் மாறிவிடும். அது போல் இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று தனது உற்பத்தியில் குறைபாடு இருப்பதாகவும் ஆகவே.... அந்த மாடல்கள் காரை திரும்பபெறுவதாகவும் அறிவித்துள்ளது. அது என்ன என்பதை பார்க்கலாம்.

இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி, ஸ்டீயரிங் கியர் பாக்ஸில் உள்ள குறைபாடு காரணமாக ஆல்டோ கே10 மாடலின் 2,555 கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆல்டோ கே 10 காரின் ஸ்டீயரிங் கியர் பாக்ஸ் அசெம்பிளி பகுதியில் குறைபாடு இருப்பதாகவும் ஆகவே இந்த குறைபாடு சரி செய்யும் வரை காரை ஓட்டவேண்டாம் என்று வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. மேலும் இவ்வகை காரின் உரிமையாளர்கள் தாங்கள் வாங்கிய டீலர்களை தொடர்புக்கொண்டால், சுசுகி நிறுவனம் அந்த குறைபாட்டை இலவசமாக சரிசெய்து தருவதாகவும் தெரிவித்து இருக்கிறது.

ஆகவே, இந்த மாடல் கார் வாங்கி வைத்திருப்பவர்கள், இதென்னடா சோதனை... என்று நினைப்பதுடன், எப்பொழுது தனது கார் சரிசெய்து திரும்ப வரும்? எப்பொழுது காரை எடுத்து லாங் டிரைவ் போகலாம் என்று ஏக்கத்துடன் இருந்து வருகின்றனர்.

சுசுகி தனது ஆல்டோ கே 10 மாடலை 2022 ஆகஸ்ட் 18ம் தேதி அன்று அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக மாருதி சுசுகி, ஃபியூயல் பம்ப் மோட்டாரில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக கார்களையும், வேகன் ஆர் கார்களையும் திரும்ப பெற்றிருந்த நிலையில் தற்பொழுது ஆல்டோ காரிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.