ஜிம் ஃபார்லி x page
கார்

“6 மாதமாக ஓட்டி வருகிறேன்.. அதைவிட விரும்பவில்லை” - போட்டி கார் நிறுவனத்தைப் புகழ்ந்த ஃபோர்டு CEO!

கார் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஃபோர்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஜிம் ஃபார்லி, சீனாவின் Xiaomi SU7 வாகனத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Prakash J

Xiaomi ஸ்மார்ட்போன்களுக்குப் பெயர்பெற்றது. கடந்த பல ஆண்டுகளாக இந்தியா மற்றும் சீனாவில் ஸ்மார்ட்போன் சந்தையில் இந்த சீன நிறுவனமானது ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இப்போது அந்த நிறுவனம் மின்சார வாகனங்களைத் தயாரித்து வருகிறது. அப்படி இந்த நிறுவனம் தயாரித்த SU7 மாடல் கார், பிற போட்டி நிறுவனத்தால் பாராட்டப்பட்டுள்ளது. ஆம், கார் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஃபோர்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஜிம் ஃபார்லி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மின்சார வாகனங்களின் போட்டி குறித்து கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் ஜிம் ஃபார்லி பேசினார். அப்போது அவர், “போட்டியைப் பற்றி அதிகம் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் நான் கடந்த ஆறு மாத காலமாக Xiaomi வாகனத்தை ஓட்டி வருகிறேன். நான் அதை விட்டுவிட விரும்பவில்லை. நாங்கள் போட்டியிடுவதற்கு முன்பு அனைத்தையும் ஓட்ட முயற்சிக்கிறோம். பின்பு, உண்மையான போட்டியை வெல்ல விரும்புகிறோம். அனைத்துப் போட்டிகளையும் எமது நிறுவனம் விரும்புகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

“சீனத்தில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனத்தை, தான் ஓட்டுவதாக ஜிம் ஃபார்லி சமீபத்தில் ஒப்புக்கொண்டது, ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கடின உழைப்பாளி ஊழியர்களின் முகத்தில் அறைந்தது போன்று உள்ளது” என அமெரிக்க எரிசக்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேசன் ஐசக் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: IPL 2025: உறுதியான தோனி..? தக்கவைக்கப்படும் வீரர்கள் யார் யார்? எமோஜிகளால் சஸ்பென்ஸ் வைத்த CSK!

சீனாவைச் சேர்ந்த Xiaomi நிறுவனம்தான் EV Xiaomi SU7 மின்சார வாகனத்தைத் தயாரித்து வருகிறது. சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்கள் பொதுவாக அவற்றின் அமெரிக்க போட்டியாளர்களைவிட மலிவானவை. டாலர் 30,000க்கு விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இது வெறும் 2.7 வினாடிகளில் 62 மைல் வேகத்தை அடைவதாகவும், இது டெஸ்லாவின் தயாரிப்பான மாடல் 3ஐ மிஞ்சும் என்றும் கூறப்படுகிறது. இதை, ஒருமுறை சார்ஜ் செய்தால் 435 மைல்கள் வரை செல்லும் எனவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏற்றவாறு பயணிப்பதாகவும் கூறப்படுகிறது.

டிசம்பர் 2023இல் அறிமுகப்படுத்தப்பட்டது, SU7, உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் விற்பனையாளரான Xiaomi ஆல் விற்கப்பட்ட முதல் மின்சார வாகனம் ஆகும். பலராலும் பேசப்படும் இந்த வாகனம் அமெரிக்காவில் அதிகமாய் கிடைப்பதில்லை, ஏனெனில் சீனத் தயாரிப்பான EVகள் மீது அந்நாட்டு அரசு 100% கட்டணத்தை விதித்துள்ளது. மேலும், சீன நிறுவனங்களில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்வதைத் தடுப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ஒடிசா | வலியால் துடித்த கர்ப்பிணி.. விடுமுறை தராத உயரதிகாரி.. அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!