யூசுப் பதான் - மம்தா பானர்ஜி web
இந்தியா

’தேர்தலிலும் சிக்சர் விளாசல்’ - மேற்குவங்கத்தில் காங்கிரஸ், பாஜக இரண்டையும் காலிசெய்த யூசுப் பதான்!

25 ஆண்டுகளாக காங்கிரஸின் கோட்டை என கூறப்பட்ட பஹரம்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்ட கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் முன்னிலை வகித்துவருகிறார்.

Rishan Vengai

கிரிக்கெட் களத்தில் சிக்சர்களாக பறக்கவிடும் யூசுப் பதான், அரசியல் களத்தில் என்னசெய்யப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில் அரசியலிலும் சிக்சர்களாக பறக்கவிட்டுள்ளார்.

யூசுப் பதான்

1999 முதல் மேற்குவங்கம் பஹரம்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி வேட்பாளராக இருந்துவரும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு எதிராக யூசுப் பதானை களமிறக்கியது திரிணாமுல் காங்கிரஸ். காங்கிரஸ், பாஜக என்ற இரண்டு பெரிய கட்சிகளுக்கு இடையில், புதியதாக களமிறங்கும் யூசுப் பதான் எப்படியும் தோல்வியை தான் தழுவுவார் என கூறப்பட்ட நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் போட்ட ஸ்கெட்ச் அவர்களுக்கு வெற்றியின் பக்கம் கொண்டு சென்றுள்ளது.

காங்கிரஸ், பாஜகவை பின்னுக்கு தள்ளிய யூசுப் பதான்!

கொல்கத்தாவின் பிரிகேட் மைதானத்தில் ஜோனோகோர்ஜோன் சபா என்ற மிகப்பெரிய பிரச்சார கூட்ட நிகழ்வில், 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடும் 42 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்த திரிணாமுல் காங்கிரஸ், பஹரம்பூர் தொகுதியில் எப்போதும் வெற்றிபெற்றுவரும் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் போட்டியிடுவார் என்று அறிவித்தது.

cm mamtha

1999 முதல் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி வேட்பாளராக இருந்துவரும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு எதிராக யூசுப் பதான் வெற்றிபெறுவது கடினம் என கூறப்பட்ட நிலையில், 25 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸின் கோட்டையை தகர்த்துள்ளார் யூசுப் பதான்.

pathan

தேர்தல் எண்ணிக்கை நிலவரப்படி, பஹரம்பூர் தொகுதியில் கிட்டத்தட்ட 2 லட்சம் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்துவரும் யூசுப் பதான், 5 முறை எம்பி ஆக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை விட 25,000 வாக்குகள் எண்ணிக்கையில் பின்னுக்கு தள்ளியுள்ளார். மூன்றாவது இடத்தில் இருக்கும் பாஜக வேட்பாளர் நிர்மல் குமார் 56,000 வாக்குகள் பின்தங்கியுள்ளார்.