மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தனது பேட்டியொன்றில் யூ-ட்யூப் மூலம் தனக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.4 லட்சம் வரை வருமானம் வருவதாக தெரிவித்திருக்கிறார்.
ஹரியானாவில் நடைபெற்ற விழாவொன்றில் தனது கொரோனா பொதுமுடக்க அனுபவம் குறித்து பேசிய நிதின் கட்கரி, “கொரோனா அச்சம் அதிகமிருந்த பொதுமுடக்க காலத்தில், நான் இரு விஷயங்கள் செய்தேன். ஒன்று, வீட்டில் சமையல் செய்ய தொடங்கினேன். மற்றொன்று, இணையவழியில் கருத்தரங்குகள் நடத்தினேன்.
இதையும் படிங்க... சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்: நிதின் கட்கரி
நான் நடத்திய அனைத்து இணையவழி கருத்தரங்குகளையும், எனது யூ-ட்யூப் பக்கத்தில் பகிர்ந்தேன். அந்தக் காணொளி பெரியளவில் பார்வையாளர்களை எட்டியதால், யூ-ட்யூபிலிருந்து வருவானம் வரத்தொடங்கியது. அதன் விளைவாக தற்போது ஒவ்வொரு மாதமும் யூ-ட்யூப் எனக்கு ரூ.4 லட்சம் வரை பணம் தருகிறது” என்று கூறினார்.
இந்த நிகழ்வின்போது ஹரியானா முதல்வர் லால் கத்தார், குருக்ராம் லோக்சமா உறுப்பினர் ராவ், மாநில அரசின் உயர பதிவுகளில் இருப்பவர்கள் என பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.