இந்தியா

தனியாக காரில் பயணித்தாலும் முகக்கவசம் கட்டாயம்: டெல்லி உயர்நீதிமன்றம்

Veeramani

ஒருவர் தனியாக கார் ஓட்டினாலும்கூட முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சாலைகளில் பயணிக்கும் ஒரு தனியார் வாகனம் பொது இடத்தின் வரையறையின் கீழ்தான் உள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

முகக்கவச விதிகளை மீறியதற்காக டெல்லி காவல்துறை விதித்த அபராதங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு உயர்நீதிமன்றத்தில் நான்கு வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று விசாரித்தது.

அப்போது பேசிய நீதிபதி பிரதிபா எம்.சிங், “சாலையில் பயணிக்கும் ஒரு தனியார் வாகனம் என்பது, பொது இடத்தின் வரையரையின் கீழ் வருவதால், ஒருவர் தனியாக காரில் பயணம் செய்யும்போது கூட முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்” என்று கூறினார்.  மேலும் " முகக்கவம் என்பது  நமக்கு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது, இது கொடிய வைரஸ் பரவுவதைத் தடுக்கும் என்பதை மருத்துவர்களும், சுகாதாரத்துறையும் உறுதிபடுத்தியுள்ளது" என்றும் தெரிவித்தார்