வெளிநாடுசெல்பவர் மாதிரி படம் புதியதலைமுறை
இந்தியா

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல நினைக்கும் இளைஞர்களே.. உங்களுக்கான அட்வைஸ்!!

PT WEB

வெளிநாடுகளில் வேலை செய்யும் ஆர்வம் உள்ளவரா நீங்கள். அப்போ உங்களுக்கான செய்திதான் இது...

உயர்கல்வி கற்கும் மாணவர்களின் கனவு வெளிநாடுகளில் சென்று வேலை செய்யவேண்டும் என்பதே... இது ஒருபுறம் என்றால், சாதாரண வேலையான கொத்தனார் மேஸ்திரி, ஹோட்டல் சர்வர் போன்ற வேலைக்குச் செல்பவர்களும் ஏராளம். எந்தமாதிரியான வேலையாக இருந்தாலும் இவர்கள் கவனிக்கவேண்டியது ஒன்றுதான்.

பணிக்குச்செல்லும் நிறுவனம் நன்பகத்தன்மை வாய்ந்ததா என்பதை அறியவேண்டும். சுற்றுலா விசாவில் சென்று வேலை தேடுவதை கண்டிப்பாக தவிற்க வேண்டும் என்றும்` இதை எந்த நாடும் அனுமதிப்பதில்லை என்று கூறுகிறார் அயலாக்கத் தமிழர் நலவாரிய ஆணையர் கிருஷ்ணமூர்த்தி.

கிருஷ்ணமூர்த்தி அயலகத் தமிழர் நல வாரியம்

“ வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் தங்களின் விசா முடிந்தும் வேலை செய்கிறார்கள் இது முற்றிலும் தவறானது. விசா முடிந்து வேலை செய்பவர்களை கைது செய்துவிடுகிறார்கள். ஆகவே வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் மத்திய வெளியுறவுத்துறையில் பதிவு செய்துள்ள 170க்கும் மேற்பட்ட முகவர்களை அணுகலாம். இதில் தமிழ்நாட்டில மட்டும் பதிவு செய்த முகவர்கள் 110 பேர் உள்ளனர்.

வெளிநாட்டில் வேலை கிடைத்தாலும் நொர்க் பெர்மிட் விசாமூலம்தான் வேலைக்குச் செல்லவேண்டும். வேலை கொடுக்கும் நிறுவனத்தின் உண்மைத்தன்மையை அந்நாட்டு தூதரகத்தில் இமெயில்மூலம் விசாரிக்க வேண்டும். 24 மணிநேரம் கட்டணமில்லாத் தொலைபேசி அழைப்பு மையங்களை தமிழக அரசு தொடங்கியுள்ளது. வெளிநாடு செல்பவர்களுக்கு முன்பயண புத்தாக்கப் பயிற்சி மையங்கள் 7 மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது.

இதைப்பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியை பார்க்கலாம்.