இந்தியா

பசுவை வேட்டையாடும் சிங்கத்தை வீடியோ எடுக்கும் இளைஞர்கள்: குவியும் கண்டனங்கள்

பசுவை வேட்டையாடும் சிங்கத்தை வீடியோ எடுக்கும் இளைஞர்கள்: குவியும் கண்டனங்கள்

sharpana

பசுவை சிங்கம் ஒன்று வேட்டையாடுவதை அருகிலேயே நின்று உள்ளூர்வாசிகள் வீடியோவும் புகைப்படங்களும் எடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கண்டனத்தை குவித்து வருகிறது.

குஜராத்தின் வனப்பகுதியில் மேய்ச்சலுக்காக கட்டப்பட்டிருந்த பசுவை பாய்ந்துவரும் சிங்கம் ஒன்று கீழே வீழ்த்தி வேட்டையாடுகிறது. அதன் அருகிலேயே  பைக்குகளை நிறுத்திவிட்டு சில இளைஞர்கள் வீடியோ எடுத்துக்கொண்டும் புகைப்படம் எடுத்தும் சிரித்தும் இருக்கிறார்கள்.

இந்த வீடியோ ட்விட்டரில் வைரலானவுடன்  “சமூக ஊடகங்களில் மலிவான விளம்பரம் பெற சிங்கத்தின் வேட்டையினை உள்ளூர்வாசிகள் சட்டவிரோதமாக வீடியோ எடுப்பது தவறானது.

சிங்கங்களின் பாதுகாப்புக்கு முற்றிலும் எதிரானது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கவேண்டும்” என்று பலர் கருத்திட்டு வருகிறார்கள்.