கர்நாடகா மாநிலம் கோடஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயம் செய்வதால் அவர்களுக்கு பெண் கொடுக்க சிலர் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணத்துக்கு பெண் கிடைக்க வேண்டி, கோடஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 160 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாதேஸ்வரன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்று வழிபட்டனர்.
மேலும், போதிய மழைபெய்து விவசாயம் செழிக்கவும் வேண்டினர். மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், பெண் கிடைக்க வேண்டி கடந்த சில மாதங்களுக்கு முன் மலை மாதேஸ்வரன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்றது குறிப்பிடத்தக்கது.