இந்தியா

"ஜெயிலுக்கு போறேன்.. நானும் ரவுடி தான்.. " - ஒரு நாள் தங்க வாடகை ரூ. 500!

Abinaya

ஒருவருடைய ஜாதகத்தில் கட்டம் சரியில்லாதவர்கள், கண்டிப்பாக சிறைக்குச் சென்றே தீர வேண்டும் என்ற விதி உள்ளவர்கள் , அதற்கான பரிகாரமாக சிறையைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என உத்தராகாண்ட் அரசு தெரிவித்துள்ளது.

வித்தியாசமான சுற்றுலா அனுபவங்களை பெற மக்கள் விரும்புகிறார்கள். அதன்படி, சிறை சுற்றுலா தான் இப்போதைய ட்ரெண்ட். ரூ.500 செலுத்தினால், சிறைக் கைதியை போல ஒருநாள் உள்ளே இருக்கலாம் என சில மாநிலங்களில் சிறைதுறை  அறிவித்தவுடன் தினமும் பல விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது.

உத்தராகாண்ட் போலவே கர்நாடகம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சிறை சுற்றுலா திட்டம் அம்மாநில அரசுகளின் சிறைத்துறை தொடங்கியவுடன் நல்ல வரவேற்பு இருந்தது. சிறையில் கைவிடப்படட இடங்களில் இதுபோன்ற சுற்றுலா திட்டங்கள் அறிமுகத்தால் அரசுக்கும் வருமானம் பெற முடிகிறது. 

இந்த போன்ற சிறை சுற்றுலா திட்டங்களை அறிமுகப்படுப்படுத்திய நோக்கங்களில் முக்கியமானதாக, ‘பொதுமக்கள் சிறையில் தங்கி கைதிகள் அனுபவிக்கும் கஷ்டங்களை கண்டால் அவர்களுக்கும் குற்றத்தில் ஈடுப்படும் போது ஒரு பயம் வரும். இதன் மூலம் குற்ற செயல்கள் குறையும் என்ற எதிர்ப்பார்க்கப்படுகிறது’ என்று சிறைத்துறை நிர்வாகங்கள் தெரிவிக்கின்ற. சிறைக்கு ஒரு நாள் சுற்றுலாவுக்காக வருபவர்களுக்கு கைதி எண், கைதிக்கான சீருடை, சிறை அறை எண் உள்ளிட்டவை வழங்கப்பட்டு, சிறையில் 24 மணி நேரம் கைதியைப்போல வாழ ஏற்பாடுகள் உள்ளன.

சரி.. சிறை சுற்றுலா எல்லாம் ஓ.கே.. அது என்ன ஜாதகத்தில் கட்டம் சரியில்லைன்னு ஜெயிலுக்கு செல்வது  என கேட்குறீர்களா?

ஜாதகத்தில் நேரம் சரியில்லை என்றால் ஜோசியர்கள் எச்சரிப்பார்களா இல்லையா? அதுபோல் `பந்தன் யோகம்' என்று  உங்கள் ஜாதகத்தில் கிரக சேர்க்கை இருந்தால் , அதன் படி அனுபவிக்க வேண்டிய சூழல் வருமாம். அதைத் தவிர்ப்பதற்கான  பரிகாரமாக முன்கூட்டியே  சிறைக்கு சென்று வருமாறு உத்தராகாண்டில்  ஜோதிடர்கள் அறிவித்துக்கிறார்கள். அதன்படி, இப்போ ஜோதிடர்களால் பலர் சிறைக்கு சென்று வருவது அங்கு  பிரபலமாகி உள்ளது. 

நானும் ரவுடி தான் என வடிவேலு போல ஜெயிலுக்கு போயிட்டு வரவும்  , சிறை எப்படி தான் இருக்கும் என ஆர்வம் உள்ளவர்களும்  இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.