இந்தியா

”2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் வாக்குரிமையை ரத்து செய்யலாம்” - யோகா ராம்தேவ்

webteam

நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருவதாகவும் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் அவர்களின் வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் எனவும் யோகா ராம்தேவ் வலியுறுத்தியுள்ளார். 

சில நாட்களுக்கு முன்பு பாஜக எம்.பி, சாக்ஷி மகராஜ் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, இந்துக்கள் அனைவரும் நான்கு குழந்தைகள் பெற வேண்டும் எனவும் அவர்களில் ஒருவரை சாதுவாக வளர அனுமதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள பதஞ்சலி யோக பீடத்தில் ராம்தேவ் பேசினார். அப்போது,
நாட்டில் திருமணமாகாமல் இருக்கும் பிரம்மச்சாரிகளை நாம் போற்ற வேண்டும் எனவும் திருமணம் செய்ய முடிவு எடுப்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

திருமணம் செய்வோர் 2 குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அதற்கு மேல் பெற்றுக்கொண்டால் அவர்களின் வாக்கு உரிமையை பறிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.