தமிழகத்தில் கடந்த ஓராண்டாக நடந்த நிகழ்வுகளை காணும் போது, ஜெயலலிதா போன்ற ஒரு உயர்ந்த தலைவர் தேவை என்பதை உணர்த்துவதாக கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எடியூரப்பா, ஜெயலலிதாவின் தைரியம், துணிவான நிர்வாகம் ஆகியவை தன்னை ஈர்த்ததாக பதிவிட்டுள்ளார்.
மேலும் தமிழகத்தில் ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு ஓராண்டாக நடந்த அரசியல் நிகழ்வுகளை காணும் போது, அவரை போன்ற தலைவரின் தேவையை உணர்த்துவதாக தெரிவித்துள்ளார்.