இந்தியா

“நான் பேசிய கருத்தை காங்கிரஸ் திரித்து கூறிவிட்டது” - எடியூரப்பா

“நான் பேசிய கருத்தை காங்கிரஸ் திரித்து கூறிவிட்டது” - எடியூரப்பா

webteam

கர்நாடகாவில் அதிருப்தி எம்எல்ஏக்கள் குறித்து தாம் பேசிய கருத்தை காங்கிரஸ் திரித்து கூறிவிட்டதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசை கவிழ்க்க, அதிருப்தி எம்எல்ஏக்களிடம் எடியூரப்பா பேரம் பேசியதாக ஆடியோ வெளியானது. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டால், பாரதிய ஜனதா தலைமையில் அமையும் அரசில் அவர்களுக்கு பதவி வழங்குவதாக எடியூரப்பா பேசியது போன்ற ஆடியோ வெளியானதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடியூரப்பா தாம் அவ்வாறு பேசவில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தை குழப்புவதற்காக காங்கிரஸ் கட்சியினர் திரித்து கூறி வருவதாகவும் தெரிவித்தார். அதிருப்தி எம்எல்ஏக்கள் சொந்த காரணங்களுக்காகவே பதவியை ராஜினாமா செய்தனர் என்றும், இதற்கு பாரதிய ஜனதாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் எடியூரப்பா கூறினார். 

இதற்கிடையே எடியூரப்பா பேசியதாக வெளியான ஆடியோவை தொடர்ந்து, ஆளுநரை சந்தித்த முன்னாள் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங் குழவினர், கர்நாடகாவில் பாரதிய ஜனதா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், மத்திய அமைச்சரவையில் இருந்து பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷாவை நீக்க வேண்டும் என்று கோரியும் மனு அளித்தனர்.