பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக்கோரி நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 23 முதல் தங்கள் போராட்டத்தை மீண்டும் தொடங்கினர். இவர்களுடைய போராட்டத்திற்கு விவசாய அமைப்புகள், தனியார் அமைப்புகள் எனப் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆயினும், பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக மத்திய அரசு இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், கடந்த 28ஆம் தேதி, அதாவது புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பின்போது நாடாளுமன்றத்தை நோக்கி இவர்கள் அனைவரும் பேரணியாக சென்றனர். அப்போது அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதற்கு தமிழ்நாடு முதல்வர் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பிரிஜ் பூஷனுக்கு எதிராக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மல்யுத்த வீரர்கள் தாங்கள் வாங்கிய பதக்கங்களை கங்கை நதியில் வீசுவோம் என நேற்று அறிவித்தனர். அதன்படி, நேற்று மாலை கங்கை நதியில் பதக்கங்களை வீசுவதற்காகச் சென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் விவசாய சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசுக்கு 5 நாட்கள் அவகாசம் கெடு விதிக்குமாறு அவர்கள் கூறியதை அடுத்து, கங்கை நதியில் பதக்கங்களை வீசும் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் முன்னணி மல்யுத்த வீராங்கனைகளால் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் பிரிஜ் பூஷன் சரண் சிங் யார் என்பது குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்.