வினேஷ் போகத் web
இந்தியா

’போட்டிக்கு போக விடாம தோற்கடிக்கலாம்.. போட்டினு வந்துட்டா..’ ஹரியானா தேர்தலில் வினேஷ் போகத் வெற்றி!

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய வினேஷ் போகட் வெற்றிபெற்று வாகை சூடியுள்ளார்.

Rishan Vengai

2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பெண்களுக்கான மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத், ஜப்பானின் நம்பர் 1 வீராங்கனையான சுசாகியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி, ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிவரை வந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.

இறுதிப் போட்டியில் வென்று தங்கத்துடன் நாடு திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட வினேஷ் போகத், நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோ எடையை விட 100 கிராம் அதிகம் இருந்ததால் மல்யுத்த விதிமுறையின் படி கடைசிநேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

மேல்முறையீடு செய்தும் எந்த பயனும் இல்லை என்பதால் மனவேதனையுடன் ஓய்வை அறிவித்த வினேஷ் போகத், விளையாட்டிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து ஹரியான சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக வினேஷ் போகத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. ஹரியானாவின் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வினேஷ் போகத் போட்டியிட்ட நிலையில், இன்றைய தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.

போட்டில பங்கெடுக்க விடாம தோற்கடிக்கலாம்.. போட்டினு வந்துட்டா வெற்றி தன்வசம்!

ஹரியான சட்டப்பேரவை தேர்தலில் ஹரியானவின் ஜூலானா தொகுதியில் முன்னாள் ராணுவ கேப்டன் யோகேஷ் பைராகியை எதிர்த்து வினேஷ் போகத் போட்டியிட்டார்.

வினேஷ் போகத்

இன்றைய தேர்தல் முடிவின் படி நாள் தொடங்கப்பட்டதிலிருந்தே வினேஷ் போகத் மற்றும் யோகேஷ் பைராகி இருவரும் மாறிமாறி முன்னிலை பெற்றநிலையில், வினேஷ் போகத் முடிவில் வெற்றிபெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வினேஷ் போகத்

இறுதிகட்ட எண்ணிக்கைக்கு முன்பு அரை வினேஷ் போகத் பின்னடைவு என செய்திவெளியான நிலையில், இறுதிகட்ட எண்ணிக்கையில் 63,305 வாக்குகளுடன் 5,909 வாக்குகள் வித்தியாசத்தில் யோகேஷ் பைராகியை வீழ்த்தி வினேஷ் போகத் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.