இந்தியா

அருணாச்சலப் பிரதேசத்தில் அமெரிக்க போர் விமான பாகங்கள் கண்டுபிடிப்பு

அருணாச்சலப் பிரதேசத்தில் அமெரிக்க போர் விமான பாகங்கள் கண்டுபிடிப்பு

webteam

இரண்டாம் உலகப் போரில் விபத்தில் விழுந்த அமெரிக்க போர் விமானத்தின் பாகங்களை, இந்திய ராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ரோயின் மாவட்டத்தில் மலைக்குள் டிரெக்கிங் சென்ற சிலர் அங்கு உடைந்த சில இயந்திரங்கள் கிடப்பதைக் கண்டனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ராணுவத்தினருக்குத் தெரிவித்தனர். இதையடுத்து, 12 பேர் கொண்ட ராணுவக் குழு அதைத் தேடி பனி மலைக்குள் சென்றது.

அது காட்டுப்பகுதி. 30 கி.மீ தூரம் பனியால் சூழப்பட்ட காட்டுக்குள் சென்று கடுமையானத் தேடலுக்குப் பின், 5 அடி ஆழத்துக்கு அடியில் இருந்த, சில இயந்திரங் களைக் கண்டுபிடித்தனர். அதை வெளியே எடுத்துப் பார்த்தபோது, உடைந்த விமான பாகங்கள் என தெரிய வந்தது. பின்னர் மேலும் சில உடைந்த பாகங்களைக் கண்டுபிடித்தனர். இது இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட அமெரிக்க போர் விமானம் என்பது தெரிய வந்துள்ளது. இதை இந்திய ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் மியான்மர்  ஜப்பான் கட்டுப்பாட்டில் இருந்ததால், இந்திய -சீன போக்குவரத்துக்கு இந்த விமானப் பாதையை அமெரிக்கா பயன்படுத்தியது. மோசமான வானிலை உள்ளிட்ட காரணாங்களால் சீனாவுக்கு சென்ற அமெரிக்க போர் விமானங்கள் விபத்துகளை சந்தித்தன. இதில் 400 அமெரிக்க வீரர்கள் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.