முழு இடது கண் மற்றும் பகுதி முகத்தை மாற்று அறுவை செய்த உலகின் முதல் நபர் சிறந்த ஆரோக்கியத்துடன் வாழ்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
NYU லாங்கோன் ஹெல் மருத்துவமனையின் மருத்துவர்கள், திங்கட்கிழமை கட்டுரை ஒன்றின் வாயிலாக இந்த நெகிழ்ச்சிக்குரிய நிகழ்வை பகிர்ந்திருக்கிறார்கள்.
ஆர்கன்சாஸைச் சேர்ந்த ஆரோன் ஜேம்ஸ் என்ற இராணுவ வீரருக்கு வயது 46. இவர், கடந்த 2021 ஆம் ஆண்டு, வேலையில் ஈடுபட்டிருந்த போது உயர் மின்னழுத்த மின்சார விபத்தில் சிக்கி உடலின் இடது பக்கம் மற்றும் கண் உட்பட முகத்தின் பெரும்பகுதியை இழந்தார். இதனால், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.
முதலில் முகத்தின் ஒரு பகுதியை மட்டுமே மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று தெரிவித்த மருத்துவர்கள், ஜேம்ஸின் பார்வையை மீட்டெடுக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், இது குறித்துதெரிவித்த மருத்துவர்கள்.. ”7,200 வோல்ட் மின்சாரம் ஆரோனின் முகத்தை கிழித்துவிட்டது.. எனவே, இவரது கண், மூக்கு, உதடு, பற்கள், கன்னம் என அனைத்தும் பெரும் சேதமடைந்துவிட்டது.
எனவே, கண் மாற்று அறுவை சிகிச்சை செய்வது மிகவும் சிக்கலானது. கண்களில் உள்ள ரத்த நாளங்கள் , நரம்புகள் மிகவும் சிறயவை. எனவே இது மிகவும் கடினம்.” என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும் முயற்சி செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில்தான், இவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு 21 மணி நேரம் கொடையளரிடமிருந்து பெறப்பட்ட இடது கண் , முகத்தின் பகுதி பாகமானது அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதில், 140 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள், செவிலியர்கள் அடங்கியுள்ளனர்.
ஆனால், அவரது கண்ணில் பார்வை கிடைக்காமல் போய் விடுமோ என்ற சந்தேகித்த மருத்துவர்... நிச்சயம் பார்வை வருவதற்கான கூறுகள் உள்ளது என்று, அவரில் செய்யப்பட்ட சோதனையின் மூலம், பார்வையை மீட்டெடுக்க முடியும் என்று அறிந்துள்ளனர். மேலும், இவர் ஒருவருடத்திற்கும் மேலாக நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சையில், சுற்றுப்பாதை எலும்புகள், மூக்கு, இடது மேல் மற்றும் கீழ் இமைகள், இடது புருவம், மேல் மற்றும் கீழ் உதடுகள் மற்றும் கீழ் மண்டை ஓடு, கன்னம், நாசி மற்றும் கன்னம் ஆகிய பகுதிகள் உட்பட இடது கண் என அனைத்தும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.