இந்தியா

மகிழ்ச்சியான நாடுகள் லிஸ்ட்: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

மகிழ்ச்சியான நாடுகள் லிஸ்ட்: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

Rasus

மகிழ்ச்சியான நாடுகள் எவை என்பது பற்றி ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா 122 வது இடத்தில் இருக்கிறது.

அரசு, சமூகம் மீதான நம்பிக்கை, பாரபட்சமற்ற சமூகம், சுதந்திரம், ஆரோக்கியமான வாழ்க்கை, உற்பத்தி, ஊழலற்ற நிர்வாகம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை ஐநா தயாரித்துள்ளது. இந்த அறிக்கையின் படி, 155 நாடுகளின் பட்டியல் வெளியிட்டப்பட்டது. அதில் நார்வே முதலிடத்தில் உள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்விட்சர்லாந்து, பின்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்வீடன் ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களைப் பெற்றுள்ளன.

மத்திய ஆப்பிரிக்க நாடுகளான, தெற்கு சூடான், தான்சானியா உள்ளிட்ட நாடுகள் கடைசி இடங்களில் உள்ளன. நமது அண்டை நாடுகளான, சீனா 79 இடத்திலும், பாகிஸ்தான் 80, நேபாளம் 99, வங்காளதேசம் 110, ஈராக் 117, இலங்கை 120-வது இடங்களில் அதாவது இந்தியாவை விட முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.