காவல் நிலையம் எக்ஸ் தளம்
இந்தியா

மத்திய பிரதேசம்| கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. தப்பிக்க அரை நிர்வாணமாய் ஒன்றரை கி.மீ. ஓடிய இளம்பெண்!

Prakash J

இந்தூரில் வசித்த பட்டியல் வகுப்பைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னுடைய கணவருடன் வேலை தேடி உஜ்ஜைனி வந்துள்ளார். அப்போது அவர்கள் இந்திரா நகர்ப் பகுதியில் வேலை கேட்டு அலைந்துள்ளனர். அந்தச் சமயத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் இவருக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார். அவர், அந்தப் பெண்ணின் மீது வந்த தவறான எண்ணத்தின் காரணமாக, அவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி அவர்கள் இருவரையும் மோட்டார் சைக்கிளில் தாஜ்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்த விஷயம் தெரிந்து இம்ரான் என்பவர் அங்கே வந்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை

அந்தச் சமயத்தில் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக அந்தப் பெண்ணின் கணவரை கடைக்கு ரவி அழைத்துச் சென்றுள்ளார். இதையடுத்து, இம்ரான் அந்த வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளார். இதற்கிடையே, கடைக்குச் சென்றிருந்த ரவி, அந்தப் பெண்ணின் கணவரிடம் ஏதோ சொல்லி அங்கேயே அமரவைத்துவிட்டு, அவரும் தாஜ்பூருக்கு வந்துள்ளார். பின்னர், ரவியும் அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளார். இதிலிருந்து தப்பிக்க வெளியே சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் அரை நிர்வாணமாக ஓடியுள்ளார்.

இதையும் படிக்க: வியட்நாம் சென்ற புதின்.. விரும்பாத அமெரிக்கா.. சந்திப்பில் நடந்தது என்ன.. உற்றுநோக்கும் உலக நாடுகள்!

பின்னர், கொஞ்சம் தூரத்தில் சுரங்கத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள், அந்தப் பெண்ணுக்கு உடை கொடுத்து உதவியுள்ளனர். பின்னர் இதுகுறித்து பன்வாசா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரவீந்திர கட்டரே தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். பின்னர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த ரவி மற்றும் இம்ரானை போலீசார் தீவிரமாகத் தேடினர்.

பாலியல் வன்கொடுமை

போலீசாரைக் கண்டதும் அவர்கள் தப்பியோடியபோது கீழே தவறி விழுந்ததில் கால்கள் உடைந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, அந்தப் பெண் பேசிய மொழி புரியாததால், போலீசாரால் உடனடியாக விசாரணையைத் தொடங்க முடியவில்லை. பின்னர் வேறு இடத்திலிருந்து அந்த மொழி தெரிந்த போலீசார் மூலம் விஷயம் வெளியில் தெரிய வந்ததையடுத்து, சிசிடிவி மூலம் தவறிழைத்தவர்களைப் போலீசார் தேடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: FactCheck|முகமது ஷமி - சானியா மிர்சா திருமணம்? வைரலாகும் புகைப்படங்கள்.. உண்மை என்ன?