இஸ்லாமியர் ஒருவர் டிரைவராக சென்றதால், தனது ஊபர் முன்பதிவை பெண் ஒருவர் ரத்து செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் நேற்று ஊபர் நிறுவனத்தின் காரை முன்பதிவு செய்துள்ளார். அவருக்கு ஊபர் நிறுவனம் ஒதுக்கிய காரின் டிரைவர் இஸ்லாமியராக இருந்துள்ளார். இதனால் அந்தப் பெண் தனது முன்பதிவை ரத்து செய்துவிட்டார். இது தொடர்பாக அப்பெண் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டார். அதில், “நேற்று நான் முன்பதிவு செய்த காரின் டிரைவர் இஸ்லாமியராக இருந்ததால் அதனை நான் ரத்து செய்தேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பெண்ணின் பதிவிற்கு ஊபர் நிறுவனம் பதிலளித்துள்ளது. அதில், “இந்தப் பிரச்னையை நாங்கள் நிச்சயமாக தீர்க்க விரும்புகிறோம். உங்களுடைய ஊபர் கணக்கின் தொலைப்பேசி எண்ணை எங்களுக்கு அனுப்புங்கள். இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.