இந்தியா

சபரிமலைக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்ற நிலை தொடரும்

சபரிமலைக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்ற நிலை தொடரும்

jagadeesh

சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்ற 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு பரிந்துரை செய்துள்ளது. இதனையடுத்து சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்தாண்டு அளித்த தீர்ப்பு தொடரும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து உச்சநீதிமன்றம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட 65 சீராய்வு மனுக்கள் மீதான வழக்கில் இன்று காலை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயுடன் நீதிபதிகள் ரோஹிண்டன் நரிமன், ஏ எம் கன்வில்கர், டிஒய் சந்திரசூட், மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இடம்பெற்றனர். 

உச்சநீதிமன்ற தீர்ப்பை வாசிக்கத் தொடங்கிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் "பெண்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமல்ல, வேறு கோயில்களிலும், மசூதிகளிலும் உள்ளது. சபரிமலை வழக்கில் மத நம்பிக்கையை கருத்தில் கொண்டோம். மேலும் அனைத்து மதத்தினருக்கும் அவரவர் நம்பிக்கைகளை பின்பற்ற உரிமை உண்டு" என தெரிவித்தார்.

இதனையடுத்து உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகளில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கன்வில்கர், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தனர்.