malayala cinema pt desk
இந்தியா

"மலையாள திரையுலகில் மோசமாக நடத்தப்படும் பெண்கள்" - ஆர்டிஐ மூலம் வெளியான நீதிபதி ஹேமா ஆணைய அறிக்கை!

கேரள திரையுலகில் பெண்கள் மிகவும் மோசமாக நடத்தப்படுவதாக நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

webteam

2017ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மலையாள திரையுலகில் பெண்கள் நிலை குறித்து ஆராய கேரள அரசு நீதிபதி ஹேமா தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.

அக்குழு தன் அறிக்கையை மாநில அரசிடம் ஏற்கனவே சமர்ப்பித்த நிலையில் தற்போது அந்த அறிக்கை தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் கேரள ஊடகங்களுக்கு கிடைத்துள்ளது.

பாலியல் வன்கொடுமை

முலையாள படவுலகில் பெண்கள் பாலியல் ரீதியாக மிகப்பெரிய நிர்ப்பந்தங்களை சந்திப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. மேலும் சில தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்களின் வலிமையான அதிகார கூட்டணி மலையாள திரையுலகை ஆட்டிப்படைப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. திரையுலகில் உள்ள பெண்களில் பலர் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளதாகவும் அச்சம் காரணமாக அவர்கள் அதை வெளியே தெரிவிக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது