இந்தியா

மோடியின் கைகளில் ராக்கி கயிறு கட்டிய குழந்தைகள்

மோடியின் கைகளில் ராக்கி கயிறு கட்டிய குழந்தைகள்

webteam

ரக்ஷா பந்தன் விழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தனர். 

இன்று நாடு முழுவதும் சகோதரத்துவத்தை போற்றும் ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து பள்ளி மாணவிகள், மகளிர் அமைப்பினர், விமானப் பணிப் பெண்கள், பிரம்ம குமாரி அமைப்பினர் உள்ளிட்டோர் வந்தனர். அங்கு அவர்கள் மோடியின் கையில் ராக்கி கட்டி உற்சாகமடைந்தனர். இந்த நிகழ்வின் போது தனது கையில் ராக்கி கட்டிய குழந்தையை கட்டி அணைத்து கொஞ்சி மகிழ்ந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தவறாமல் ராக்கி கயிறு கட்டும் QAMAR MOHSIN SHAIKH என்ற பெண் தனது கணவருடன் மோடியைக் காண வந்தார். பிரதமரின் கையில் ராக்கி கட்டி மகிழ்ந்தார் அவர், பின்னர் தனது கணவர் உருவாக்கிய ஓவியத்தை பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கினார். கோள்களின் பின்னணியில் மோடி இடம்பெற்ற பிரமாண்ட ஓவியத்தை QAMAR MOHSIN SHAIKH வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ராக்கி கயிறு கட்ட அவரது இல்லத்துக்கு வந்திருந்தனர். அப்போது மோடி எழுந்து சென்று ராக்கி கட்டிக்கொண்டார்.