இந்தியா

கொரோனா உறுதியானதால் மன உளைச்சல்: விபரீத முடிவெடுத்த இளம்பெண் !

கொரோனா உறுதியானதால் மன உளைச்சல்: விபரீத முடிவெடுத்த இளம்பெண் !

jagadeesh

மகாராஷ்டிர மாநிலம் மும்பை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இதுவரை 11 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் சிகிச்சைப்பெற்று 1306 பேர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக 377 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் 2687 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மும்பையின் நாயர் மருத்துவமனையில் 29 வயதான பெண் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நாயர் மருதத்துவமனையில் 25 ஆவது வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண் இன்று அதிகாலை 3.45 மணிக்கு கழிவறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்தக் கழிவறையில் அவர் தன்னுடைய துப்பட்டாவை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது தெரிய வந்துள்ளது.

மும்பையின் வோர்லி பகுதியைச் சேர்ந்த அந்த இளம் பெண் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆஸ்துமா பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்பு அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா வைரஸ் சோதனையில் நேற்று பாசிடிவ் என வந்துள்ளது. இதனையடுத்து நேற்று இரவு முதல் அந்தப் பெண் கடும் மனை உளைச்சலில் இருந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை ஜீரணிக்க முடியாமல் இன்று அதிகாலையில் அந்தப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.