ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான தனது கணவன், சூதாட்டதில் குடும்ப சேமிப்பிற்காகவைத்திருந்த பணம் என அனைத்தையும் இழந்த நிலையில், இதனால் ஆத்திரமடைந்த மனைவி கணவனின் கழுத்தை நெறித்து கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்தோஷ்.. என்னும் நபர் தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்களும், அமித் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
21 வயதான அமித்திற்கு , 20 வயதான ஜோதி என்ற பெண்ணுடன் திருமணமான நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் சித்தார்த் நகரில் உள்ள வீட்டில் இருவரும் வசித்து வந்துள்ளனர். அமித்திற்கு வேலை இருப்பதாக நம்பிய ஜோதிக்கே திருமணத்திற்கு பிறகுதான் வேலை இல்லை என்ற உண்மையே தெரியவந்துள்ளது.. இதனால், இவர்கள் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், அமித்தின் குடும்பத்திற்கு தேவையான நிதி உதவியும் அமித்தின் தந்தை சந்தோஷ்தான் செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில், கடந்த வியாழன்கிழமை இரவு அமித்- ஜோதிக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.. பிறகு, அந்த இரவே, உறங்கி கொண்டிருந்த தனது மாமனார் சந்தோஷை அழைத்த ஜோதி, யாரோ அமித்தை கொலை செய்துள்ளனர் என்று கூறியுள்ளார். இது குறித்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அமித்தின் சடலத்தை சோதனை செய்துள்ளனர். அப்போது, அமித்தின் கழுத்தில் கருப்பு நிறத்தில் ஏதோ தடயம் இருந்துள்ளது..
வீட்டின் உள்ளே வெளிநபர் வந்ததற்கான அடையாளம் எதுவும் இல்லாததை அறிந்த காவல்துறையினர், இதனையடுத்து, அமித்தின் மனைவி ஜோதியின் மீது சந்தேகம் கொள்ளவே, ஜோதியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, தான்தான் அமித்தை கொன்றதாக ஜோதி ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த ஆறு மாதங்கங்களுக்கு முன் நீதிமன்றத்தில் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.. முதலில் அமீத் தனக்கு வேலை இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், திருமணத்திற்கு பிறகுதான் அமித்திற்கு வேலை இல்லை என்ற விஷயமே ஜோதிக்கு தெரியவந்துள்ளது.. அதோடுகூட, அமித் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு அடிமையாகி இருப்பதையும் அறிந்துள்ளார்..
பிறகு, ஆன்லை கேமிங்காக குடும்பத்தின் சேமிப்பு, ஜோதியின் நகை என அனைத்தையும் விற்றுள்ளார்.. விளையாட்டில் மிஞ்ஜியது ஏமாற்றமும் நஷ்டமும் மட்டுமே.. இறுதியில் விளையாட , ஜோதியின் மாங்கல்யத்தையும் கேட்டு சண்டையிட்டுள்ளார் அமித்..
இதன் காரணமாகவே, அன்றாடம் வாக்குவாதங்கள் எழ தொடங்கியுள்ளது.. இறுதியில் இதுவே மரணத்தையும் ஏற்படுத்தியது.
என்று ஜோதி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் மரணத்திற்கான காரணத்தை விளக்கியுள்ளனர்.
இதனையடுத்து, அமித்தின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அமித்தின் தந்தை சந்தோஷ் அளித்த புகாரின் பேரில், ஜோதி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை உள்ளூர் நீதிமன்றத்தில் ஜோதி ஆஜர் படுத்தப்படவே தற்போது நீதிமன்ற காவலில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.