இந்தியா

ஆற்றுக்குள் 15 மணி நேரம் நின்று சாத் பூஜை செய்த பெண்!

ஆற்றுக்குள் 15 மணி நேரம் நின்று சாத் பூஜை செய்த பெண்!

webteam

கடும் குளிரில் ஆற்றுக்குள் 15 மணி நேரம் நின்று, சாத் பூஜை செய்துள்ளார் ஒரு வட இந்திய பெண்!

வடமாநிலங்களில் சாத் பூஜை விழா விமரிசையாக நடைபெற்றது. சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, கொண்டாடப்படும் இந்த பூஜைக்காக, நீர்நிலைகளில் திரளும் மக்கள், சூரியனை வழிபட்டு நன்றி தெரிவிப்பது வழக்கம்.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலம் ராம்கரில் உள்ள நல்காரி ஆற்றுக்கு அப்பகுதியை சேர்ந்த சோனிதேவி என்ற 55 வயது பெண்மணி சனிக்கிழமை மாலை வந்தார். அவர் ஆற்றுக்குள் இறங்கி, வணங்கியபடி நின்றார். இரவு முழுவதும் அங்கேயே நின்றார். இதைக் கேள்விபட்டு அப்பகுதியினர் அங்கு கூடினர். சுமார் 15 மணி நேரம் ஆற்றுக்குள் நின்று சூரிய கடவுளை வழிபட்ட சோனிதேவி, பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை வெளியேறினார்.

‘கடவுளிடம் கோரிக்கை ஒன்று வைத்தேன். அது நிறைவேறினால் 15 மணி நேரம் ஆற்றில் நின்று வழிபடுவதாக வேண்டியிருந்தேன். நிறைவேறியதால் எனது வேண்டுதலை நிறைவேற்றினேன்’’ என்றார் சோனி தேவி.

கடும் குளிராக இருந்ததால், அவர் நின்ற இடத்துக்கு வெளியே கரையில் விறகு கட்டைகள் மற்றும் நிலக்கரி துண்டுகளை எரித்து சூடு உண்டாக்கினர். இதற்கு சாத் பூஜை கமிட்டி தலைவர் சமன்லால் உட்பட பலர் உதவினர்.