இரண்டாவது முறையாக மோடி அரசு பொறுப்பேற்று 50 நாள்கள் நிறைவடைந்துள்ள நிலையில், பல்வேறு துறைகளில் முக்கிய நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன
3 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம், நாடு முழுவதும் பரவலாக உள்ள குடிநீர் மற்றும் பாசனத்திற்கு ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடை சமாளிக்க புதிதாக ஜல்சக்தி அமைச்சகமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் நெல் உள்ளிட்ட வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
முறைப்படுத்தப்படாத நிதித் திட்டங்களில் மக்கள் முதலீடு செய்து மாட்டிக்கொள்ளாமல் இருக்க அவற்றிற்கு தடை விதிக்கப்பட்டது, நடுத்தர மக்கள் சொந்த வீடு வாங்குவதை ஊக்குவிக்க குறைந்த விலை வீட்டுக் கடனுக்கு கூடுதல் வரிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில், நிறுவனங்களுக்கு வரியை 25 சதவிகிதமாக்கியது. தொழில் தொடங்குவதை எளிமையாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் 100 லட்சம் கோடியை முதலீடு செய்யும் திட்டத்துக்கு சாத்தியக்கூறுகள் ஆராயும் பணி தொடங்கியுள்ளது.