இந்தியா

பெங்களூரு: ஃபேஸ்புக்கில் சர்ச்சை கருத்து பதிவிட்டவர் கைது; காவல் ஆணையர் ட்வீட்

பெங்களூரு: ஃபேஸ்புக்கில் சர்ச்சை கருத்து பதிவிட்டவர் கைது; காவல் ஆணையர் ட்வீட்

webteam

பெங்களூருவில் மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் விதமான கருத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெங்களூரு - புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் தங்கை மகன் நவீன். இவர் மத நல்லிணக்கத்தை குலைக்கும் விதமாக முகநூலில் பதிவு ஒன்றை பதிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து டி.ஜே.‌ஹள்ளி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் மீது வழக்குப்பதிவு செய்ய மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆத்திரமுற்ற அப்‌பகுதி மக்கள், காவல் நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் கற்கள் வீசப்பட்டதோடு, வாகனங்களும் தீ வைக்கப் பட்டன. கலவரத்தை அடக்க காவல்துறையினர் நடத்தியத் துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். பெங்களூரு முழுவதும் 1‌44 தடை உத்தரவும், டி.ஜி.ஹள்ளி, கே.ஜி. ஹள்ளி காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெங்களூரு காவல் ஆணையர் கமல் பான்ட் அவரது ட்விட்டர் பக்கத்தில் நவீன் கைது செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “ மத நல்லிணக்கத்தை குலைக்கும் விதமாக முகநூலில் பதிவு வெளியிட்ட நவீன் கைது செய்யப்பட்டுள்ளார். இது மட்டுமன்றி கலவரத்தில் ஈடுபட்ட 110 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரில் அமைதியை நிலைநாட்ட காவல்துறையினர் அனைவரும் ஒத்துழைப்பு அளியுங்கள்” என்று கூறியுள்ளார்.