விப்ரோ, இன்போசிஸ், டெக் மஹிந்திரா ஆகிய ஐடி நிறுவனங்களில் ஆஃபர் லெட்டர் பெற்ற பல பிரஷ்ஷர்களுக்கு ஆஃபரை திரும்பப் பெறுவதாக கடிதம் வந்துள்ளது.
விப்ரோ, இன்போசிஸ், டெக் மஹிந்திரா ஆகிய ஐடி நிறுவனங்கள் புதியவர்களுக்கு பணி வழங்க முன்வந்த நிலையில் தற்போது அவர்களுக்குக் கொடுத்த ஆஃபர் லெட்டரை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளன. சுமார் 3 மாதங்களுக்கு முன்பு இந்த நிறுவனங்களில் வேலைக்காக விண்ணப்பம் செய்த நிலையில் பல சுற்றுகளாக நடந்த நேர்க்காணல்களுக்கு பின்பு ஆஃபர் லெட்டர் வந்ததாகக் கூறும் விண்ணப்பதாரர்கள், தற்போது வேலைவாய்ப்பு கடிதம் ரத்து செய்யப்படுவதாக கடிதம் வந்துள்ளதாகக் கூறுகின்றனர். ‘எங்கள் தகுதியை நீங்கள் பூர்த்தி செய்யவில்லை. அதனால் சலுகை செல்லாது’ என்று நிறுவனம் கூறியுள்ளதாக விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்பத் துறையில் மந்தநிலை இருப்பதாக பேசப்படும் நேரத்தில், ஐடி நிறுவனங்கள் தங்கள் ஆஃபர் லெட்டர்களை திரும்பப் பெறுவது போன்ற செய்திகள் வந்துள்ளன.