இந்தியா

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று நிறைவு

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று நிறைவு

jagadeesh

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று நிறைவடைகிறது. நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளின் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 18-ஆம் தேதி தொடங்கியது. 

ராம்ஜெத் மலானி, அருண் ஜெட்லி, குருதாஸ் தாஸ்குப்தா என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அங்கம் வகித்த மறைந்த முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு, முதல் நாளன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தொடரில், இ சிகரெட் உற்பத்தி, விற்பனைக்குத் தடை, உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரிகுறைப்பு போன்ற அவசரச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. 

காஷ்மீர் பிரச்னை, சோனியா காந்தி, ராகுல் காந்தி குடும்பத்தினருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கப்பட்ட விவகாரம் உள்ளிட்டவை நாடாளுமன்றத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதா உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டன. காரசார விவாதங்கள், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் என பரபரப்பாக நடைபெற்று வந்த, குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று நிறைவடைகிறது.