இந்தியா

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பதவிக்கு ஆபத்து? 

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பதவிக்கு ஆபத்து? 

webteam
கொரோனாவால் நாட்டிலேயே அதிக பாதிப்பை மகாராஷ்டிரா சந்தித்துள்ள நிலையில் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. 
 
சிவசேனா தலைவரான உத்தவ் தாக்கரே கடந்த நவம்பர் 28ஆம் தேதி மகாராஷ்டிர முதலமைச்சராகப் பதவியேற்றார். சட்ட மேலவைக்குத் தேர்வாகி உத்தவ் முதல்வராகத் தொடர்வார் எனக் கணிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பிரச்னை காரணமாக மேலவைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதால் உத்தவ் தாக்ரேவின் திட்டம் நிறைவேறவில்லை. பதவியேற்ற ஆறு மாதத்திற்குள் அதாவது மே 28க்குள் மேலவை அல்லது பேரவைக்குத் தேர்வாக முடியாத நிலையில் உத்தவின் பதவி ஊசலாட்டத்தில் உள்ளது. 
 
 
ஆளுநர் மூலம் நியமன உறுப்பினராக்கப்படுவது அல்லது ராஜினாமா செய்து விட்டு மீண்டும் முதல்வராகப் பதவியேற்பது ஆகிய இரு வாய்ப்புகளில் ஒன்றைப் பின்பற்றி பதவியைத் தக்க வைப்பதிலும் சட்டச்சிக்கல்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனாவிற்கு எதிராகத் தீவிர போராட்டம் சென்று கொண்டுள்ள நிலையில் முதல்வரின் பதவிக்கு நெருக்கடி எழுந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது