இந்தியா

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், பத்மபூஷன் விருதை திருப்பி அளிப்பேன்: அன்னா ஹசாரே

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், பத்மபூஷன் விருதை திருப்பி அளிப்பேன்: அன்னா ஹசாரே

webteam

பாஜக அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், தனக்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதை திருப்பி அளிப்பேன் என்று சமூக சேகவர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். 

லோக்பால், லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதிகள் நியமிக்கக் கோரியும், மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் பிரச்னைகளை தீர்க்கக்கோரியும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
மகாராஷ்ட்ரா மாநிலம் அகமது நகரில் உள்ள தனது சொந்த கிராமமான ரலேகான் சித்தியில் கடந்த 30 ஆம் தேதி இந்தப் போராட்டத்தை தொடங்கினார். அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டம் நேற்றுடன் ஐந்தாவது நாளை எட்டியுள் ளது.

அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று அவரது கிராமத்தில் சாலை மறியல் நடந்தது. இந்நிலையில் அவர் பேசும்போது, ‘’எனது உயிருக்கு ஏதும் நேர்ந்தால் அதற்கு பிரதமர் மோடிதான் பொறுப்பு’’ என்று கூறியிருந்தார்.

அவர் மேலும் கூறும்போது, ‘’ நிறைவேற்றுவதாக சொன்ன வாக்குறுதிகளை, நரேந்திர மோடி அரசு நிறைவேற்ற வேண்டும். இன்னும் சில நாட்களில் நிறைவேற்றத் தவறினால், எனக்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதை திருப்பிக் கொடுப்பேன்.

நான் விருதுக்காக பணியாற்று பவன் அல்ல. நாட்டுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் பணியாற்றுவதற்காக, எனக்கு இந்த விருதை கொடுக்கப்பட்டது. மோடி அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது’’ என்றார். இவருக்கு பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.