இந்தியா

மன்னிப்பு கேட்க முடியாது: செருப்பால் அடித்த எம்.பி விளக்கம்

Rasus

ஏர் இந்தியா அதிகாரியை செருப்பால் அடித்தது தொடர்பாக மக்களவையில் சிவசேனா எம்.பி. மன்னிப்பு கேட்டார். ஆனால் சம்பந்தப்பட்ட விமான நிலைய அதிகாரியிடம் மன்னிப்பு கேட்க முடியாது எனக் கூறினார். சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட். இவர் அண்மையில் ஏர் இந்தியா பணியாளரை காலணியால் அடித்ததாக புகார் எழுந்தது. இதனால், விமானங்களில் பயணிப்பதற்கு ரவீந்திர கெய்க்வாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்தும், ஏர் இந்தியா விமானங்களுக்கு எச்சரிக்கை விடுத்தும், சிவசேனா எம்.பி.க்கள் மக்களவையில் இன்று கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய கெய்க்வாட், தாம் எந்த தவறும் செய்யவில்லை என்றும், விமான நிலைய அதிகாரிதான் தம்மிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார். இதனால் அந்த அதிகாரியிடம் மன்னிப்புக் கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும், வேண்டுமானால் மக்களவையில் மன்னிப்பு கேட்பதாகவும் கெய்க்வாட் விளக்கம் அளித்தார்.

இதனிடையே ,மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஏர் இந்தியா நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏர் இந்தியா நிறுவனம் மீது குற்றம்சாட்டி சிவசேனா எம்.பி.க்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, இந்த கோரிக்கையை விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் ஏர் இந்தியா வைத்திருப்பதாக தெரிகிறது.

சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட். இவர் அண்மையில் ஏர் இந்தியா பணியாளரை காலணியால் அடித்ததாக புகார் எழுந்தது. இதனால், விமானங்களில் பயணிப்பதற்கு ரவீந்திர கெய்க்வாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது.