இந்தியா

விடுவிக்கப்படுவாரா அத்வானி?

விடுவிக்கப்படுவாரா அத்வானி?

Rasus

பாபர் மசூதி வழக்கில் அத்வானி விடுதலையை எதிர்த்த மனு மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

கடந்த 1992 டிசம்பர் 6-ம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உட்பட 13 பேர் மீது உத்தரபிரதேசத்தின் ரேபரேலி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இவ்வழக்கில் 13 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை அலகாபாத் உயர் நீதிமன்றமும் கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் உறுதி செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு மீது உச்சநீதிமன்றம் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது.