இந்தியா

'அயோத்தி, மதுரா கோயில்களில் குண்டு வெடிக்கும்' -பாஜக எம்.எல்.ஏ.வுக்கு வந்த மிரட்டல் கடிதம்

'அயோத்தி, மதுரா கோயில்களில் குண்டு வெடிக்கும்' -பாஜக எம்.எல்.ஏ.வுக்கு வந்த மிரட்டல் கடிதம்

JustinDurai

மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏ ஒருவருக்கு பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினரிடமிருந்து மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து கடந்த மாதம் 28-ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ விஜய் குமார் தேஷ்முக்கிற்கு, தடை செய்யப்பட்டுள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவிடமிருந்து மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கடிதத்தில், அயோத்தி கோவில், மதுரா கோவில் போன்ற முக்கிய இந்துக் கோவில்களில் குண்டு வைக்க திட்டமிட்டிருப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் ரேடாரில் இருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இக்கடிதம் தொடர்பாக, எம்எல்ஏ விஜய் குமார் தேஷ்முக், பிஎப்ஐ தலைவர் எனக் கூறப்படும் முகமது ஷபி பிராஜ்தர் என்பவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து, கடிதத்தின் உண்மைத்தன்மை குறித்து சோலாப்பூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: ஞானவாபி மசூதி 'கார்பன் டேட்டிங்' விவகாரம்; நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?