இந்தியா

பேச்சை கேட்காமல் வெளியே சென்ற கணவர் : தற்கொலை செய்து கொண்ட மனைவி

பேச்சை கேட்காமல் வெளியே சென்ற கணவர் : தற்கொலை செய்து கொண்ட மனைவி

webteam

தனது பேச்சை கேட்காமல் கணவர் வெளியே சென்றதால் ஆத்திரம் அடைந்த மனைவி வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர யாரும் வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அப்படியே தேவைக்காக யாரும் வெளியே வந்தாலும் முகக்கவசம் அணிந்து கொண்டு வருமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையில்லாமல் வெளியே வருபவர்களை பிடிக்கும் போலீசார்  அவர்களுக்கு தோப்புக்கரணம், வாய்ப்பாடு சொல்லுதல் போன்ற நூதன தண்டனைகளை கொடுத்து வருகின்றனர். மேலும், சில இடங்களில் சட்ட ரீதியலான தண்டனைகளும் வழங்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவின் உக்கிரம் அதிகரித்து வரும் நிலையில் போலீசார் இந்த கடுமையான கெடுபிடிகளை கடைபிடித்து வருகின்றனர்.

இந்நிலையில், மங்களூரு அருகே தனது பேச்சை கேட்காமல் கணவர் வீட்டை விட்டு வெளியே சென்றதால் மனைவி தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. மங்களூரு அருகே பண்ட்வால், பார்லியா பகுதியைச் சேர்ந்தவர் ரமீஷா பானு(29). இவருக்கும் அப்பாஸ் அலி என்ற ஆட்டோ டிரைவருக்கும் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இதையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என ரமீஷா பானு தனது கணவரிடம் கூறியுள்ளார். ஆனால் அதை கேட்காமல் கணவர் அப்பாஸ் அலி அருகிலுள்ள அவரது மாமா வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரமீஷா பானு வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.