தெலங்கானாவில் கணவனிடம் 8 கோடி ரூபாய் கேட்ட மனைவிக்கு, கணவன் பணம் தர மறுத்ததால், ஆத்திரத்தில் கணவனையே மனைவி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது
கர்நாடகாவின் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர் 54 வயதான ரமேஷ் என்ற தொழிலதிபர் மற்றும் அவரது மனைவி நிஹாரிகா (29). ஒரு நாள் நிஹாரிகா ரமேஷை காணவில்லை என்று அருகிலிருந்த காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.. தொடர்ந்து இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், அக்டோபர் 8 ஆம் தேதி குடகுவில் உள்ள சுண்டிகோப்பா அருகே உள்ள ஒரு காபி தோட்டத்தில் எரிந்த நிலையில் உடல் ஒன்றினை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.. ஆனால், உடல் எரிந்தநிலையில் இருந்ததால், யாரென்பது அடையாளம் தெரியாமல் இருந்துள்ளது. இந்தநிலையில், அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது, அந்தவழியே நள்ளிரவில் 12 மணி அளவில் சந்தேகத்திற்கு இடமாக சென்ற சிவப்பு நிறபென்ஸ் கார் ஒன்று காவல்துறையினரிடன் கவனத்தை பெற்றுள்ளது. இதனையடுத்து, அந்த காரின் பதிவு எண்ணை சோதித்தபோது, அது ரமேஷின் பெயரில் பதிவாகியிருந்துள்ளது.
அப்போதுதான் நிஹாரிகா .. ரமேஷ் காணவில்லை என்று புகார் அளித்தது காவல்துறையினரின் நினைவுக்கு வந்துள்ளது. இந்தநிலையில்தான், நிஹாரிகாவின் மீது சந்தேகம் எழும்ப, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போதுதான் தான் தனது கணவரை கொன்றதாகவும் கொலையில் தன்னுடன் கூட்டாளிகளாக நிகில் என்ற கால்நடை மருத்துவரையும், அங்கூர் என்ற நபரையும் இணைத்து கொலை செய்ததை தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, நிஹாரிகாவின் புன்புலத்தை காவல்துறையினர் ஆராய்ந்தபோது.
நிஹாரிகாவிற்கு 16 வயது இருக்கும்போதே அவரின் தந்தை மரணமடைந்துள்ளார்.. இதன்பின்னர், நிஹாரிகாவின் அம்மா மறுமணம் செய்து கொண்டுள்ளார். நிஹாரிகா கல்வியில் சிறந்து விளங்கியுள்ளார். பொறியியல் முடித்து வேலை செய்ய ஆரம்பிக்கவே, சீக்கிரம் திருமணம் செய்து குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். பின்னர் தனது கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்துள்ளார். ஒரு கட்டத்தில்,ஹரியானாவிற்கு சென்ற நிஹாரிகா நிதி மோசடியில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றார். சிறையில் வைத்துதான் அங்குர் என்பவரை சந்தித்துள்ளார்.
பின்னர், சிறையிலிருந்து வெளியே வந்த நிஹாரிகா ரமேஷை திருமணம் செய்து கொண்டார். இவர் தொழிலதிபர் என்பதால், ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார். ஒரு நாள் ரமேஷிடம் 8 கோடி பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார் நிஹாரிகா.. ஆனால், ரமேஷ் தர மறுக்கவே,கோபமடைந்த நிஹாரிகா நிகில் என்பவருடன் திருமணத்திற்கு மாறான உறவில் இருந்துள்ளார்.
இந்தநிலையில், ரமேஷை அக்டோபர் 1-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள உப்பலில் கழுத்து நெரித்து கொன்று, விட்டிலிருந்து பணத்தை எடுத்துவிட்டு இறந்து ரமேஷின் உடலையும் எடுத்துக்கொண்டு, உப்பலிலிருந்து 800 கிமீ தொலையில் உள்ள குடகுக்கு சென்று அங்குள்ள காபி எஸ்டேட்டில் மற்ற இருவரின் உதவியோசு உடலை தீ வைத்து எரித்துள்ளார். பிறகு மூவரும் ஹைதராபத்திற்கு சென்றுள்ளனர்.. என்ற அதிர்ச்சிக்கரமான தகவல்கள் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது..
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.