இந்தியா

“என் கணவர் எப்போதுமே மற்றவருக்கு உதவுவார்”-தாக்குதலில் உயிரிழந்த வீரரின் மனைவி நிவாரண நிதி

webteam

நக்சல் தாக்குதலில் உயிரிழந்த சிஏஎஃப் வீரரின் மனைவி கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்துள்ளார்.

உலக அளவில் கொரோனா அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பெரிய கடைகள், கல்வி நிலையங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.

நாட்டில் அரசுக்கு நிதி சுமை ஏற்படாமல் இருக்கவும் கொரோனா நிவாரண நிதிக்காகவும் மக்கள் தங்களால் முடிந்த நிதியை நன்கொடையாக வழங்கலாம் என பிரதமர் மற்றும் அந்தந்த மாநில முதல்வர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதன்படி பொதுமக்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்களால் முடிந்த நிதியை அளித்து வருகின்றனர்.

இதனிடையே மார்ச் 14-ம் தேதி பஸ்தாரில் நடந்த நக்சல் தாக்குதலில் CAF வீரர் ஒருவர் உயிரிழந்தார். சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த இவரின் மனைவி ராதிகா சாஹு, தற்போது கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்காக சத்தீஸ்கர் முதல்வரின் நிவாரண நிதிக்கு 10,000 ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "என் கணவர் எப்போதும் மற்றவர்களுக்கு உதவுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதனால்தான் இதைச் செய்ய முடிவு செய்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.