இந்தியா

மார்ச் 31 வரை அவகாசம் அளிக்காதது ஏன்?: பதில் அளிக்க மறுத்த ரிசர்வ் வங்கி

மார்ச் 31 வரை அவகாசம் அளிக்காதது ஏன்?: பதில் அளிக்க மறுத்த ரிசர்வ் வங்கி

webteam

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மார்ச் 31 வரை அனுமதி அளிக்காதது ஏன் என்ற கேள்விக்கு ரிசர்வ் வங்கி பதிலளிக்க மறுத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8ஆம் தேதி அறிவித்தார். பழைய நோட்டுகளை மார்ச் 31ஆம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் எனவும் மோடி அறிவித்தார். பின்னர் அது மாற்றப்பட்டு, வெளிநாடு வாழ் இந்தியர்கள் மட்டும் மார்ச்‌ 31ஆம் தேதி வரை பழைய நோட்டுகளை மாற்றலாம் என்கிற அறிவிப்பு வெளியானது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மோடி அறிவித்தபடி பழைய நோட்டுகளை மாற்ற மார்ச் 31 வரை கால அவகாசம் வழங்காதது ஏன் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தகவலறியும் உரிமை சட்டத்தில் உள்ள தகவல் என்ற வரையறைக்குள் இந்த விவரம் அடங்காது என்பதால், பதிலளிக்க முடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.