இந்தியா

பெண்களுக்கு ஆதரவாக பேசும் ஆண்கள் கருத்தடை ஐடியா: முகநூல் பரபர

பெண்களுக்கு ஆதரவாக பேசும் ஆண்கள் கருத்தடை ஐடியா: முகநூல் பரபர

webteam

கேரளாவை சேர்ந்த ஒருவரின் முகநூல் பதிவு தற்போது சமூகவலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தனது முகநூலில் கருத்தடை குறித்து மலையாளத்தில் பதிவிட்டுள்ளார். தவறாக எதையும் அவர் பதிவிடவில்லை. தற்காலத்தில் விவாதிக்கப்பட வேண்டிய பிரச்னை குறித்து தான் பதிவிட்டுள்ளார்.

கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் ஹபீப். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கருத்தடை (Vasectomy) செய்துள்ளார். இதுகுறித்து தான் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக 20 நிமிடத்தில் கருத்தடை நடைமுறை முடிவடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். ஆண்களுக்கான  நிரந்தர கருத்தடை மூலம்  ஊசியின் மூலம் விரைப்பையில் சிறு துளையிட்டு உயிரணுக்கள் செல்லும் குழாயை மட்டும் துண்டித்து விடுவார்கள் அல்லது அடைத்து விடுவார்கள் என தெரிவித்துள்ளார். இதன்மூலம் எந்த வலியும் ஏற்படுவதில்லை.  குடும்ப திட்டமிடலின் போது, ஏன் குறைவான சிக்கல்கள் உள்ள நடைமுறைகளைத் தேர்ந்தெடுப்பதில்லை. பெண்கள் மிகவும் சிக்கலான நடைமுறைக்கு உட்படுத்தப்படுவது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இறுதியாக பெண்களிடம் ஆண்கள் ஏன் இந்தக் கடினமான முறையை மேற்கொள்ள சொல்கிறார்கள்.அன்புடைய பெண்களே அடுத்த முறை உங்கள் கணவர் உங்களிடம் வந்து கருத்தடை செய்ய பணிந்தால் அவரை செய்யச்சொல்லி பணியுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.இவரது இந்தப்பதிவு முகநூலில் ஏராளமாக ஷேர் செய்யப்பட்டுவருகிறது.இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

முதலில் ஆண்கள் கருத்தடை மற்றும்  பெண்கள் கருத்தடை குறித்து நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். ஆண்கள் கருத்தடை முறையில் மயக்க மருந்து அறுவை சிகிச்சை போன்றவை தேவையில்லை. ஊசியின் மூலம் விரைப்பையில் சிறு துளையிட்டு உயிரணுக்கள் செல்லும் குழாயை மட்டும் துண்டித்து இரண்டு பக்கமும் மூடி விடுவார்கள்.இந்த முறையில் எந்தக் கடினமும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ளும்போது அவர்களுக்கு ரத்தப்போக்கு, வலி ஆகியவை ஏற்படும். நாளடைவில் அவர்களின் உடலும் பலவீனமடையும்.