இந்தியா

காஷ்மீர் செல்ல ஐரோப்பிய எம்.பி.க்களுக்கு மட்டும் அனுமதியா ?: காங்கிரஸ்

jagadeesh

இந்திய அரசியல் கட்சித் தலைவர்களை காஷ்மீருக்கு செல்லவிடாமல் தடுத்துவிட்டு, ஐரோப்பிய ஒன்றிய எம்பிக்களை மட்டும் அனுமதிப்பது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளைச் சேர்ந்த 28 எம்பிக்கள் குழு இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளது. இன்று காஷ்மீருக்கு செல்லும் அவர்கள் அங்குள்ள கள நிலவரத்தை நேரில் பார்வையிடவுள்ளனர். இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இந்திய அரசியல் தலைவர்கள், காஷ்மீருக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள் என்றும் இது பாஜகவின் தேசியவாதமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய எம்பிக்களுக்கு மட்டும் காஷ்மீர் செல்ல அனுமதிப்பது நாடாளுமன்றத்துக்கும் ஜனநாயகத்துக்கும் அவமதிப்பாகும் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.