ரியா சிங்கா எக்ஸ் தள,ம்
இந்தியா

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா | 19 வயதில் பட்டத்தைத் தட்டிச் சென்ற குஜராத் அழகி!

Prakash J

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 போட்டி ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. 51 பேர் பங்கேற்ற இந்தப் போட்டியில் குஜராத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ரியா சிங்கா மகுடம் சூட்டினார். அவருக்கு நடிகை ஊர்வசி ரவுடேலா மகுடத்தை அணிவித்தார்.

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்ற ரியா சிங்கா, நவம்பர் மாதம் மெக்சிகோவில் நடைபெறும் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளார். இந்த போட்டியில் பிரஞ்சல் பிரியா இரண்டாவது இடத்தையும், ஜாவி வெர்க் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

வெற்றி குறித்து ரியா சிங்கா, ”நான் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டம் வென்றுள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் இந்த நிலையை அடைய கடினமாக உழைத்துள்ளேன். .மேலும் முந்தைய வெற்றியாளர்களால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

2005இல் பிறந்த ரியா சிங்கா, மிகக் குறைந்த வயதில் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தை வென்றவர் ஆவார். ரியா, தனது மாடலிங் துறையை 16 வயதில் தொடங்கினார். பின்னர், அதில் விரைவிலேயே பிரபலமடைய தொடங்கினார். திவாஸ் மிஸ் டீன் குஜராத் பட்டத்தை வென்றதுதான் அவரது முதல் பெரிய சாதனை. இந்த சாதனை, மாடலிங் உலகில் அவர் நுழைவதற்கு அடித்தளமாக அமைந்தது. அவர் மிஸ் டீன் ஆசியா மற்றும் மிஸ் டீன் எர்த் பட்டங்களையும் பெற்றுள்ளார்.